
கோலாலம்பூர், அக் 18 – மலேசிய இந்திய சமூக மடானி வாட்சாப் புலனத்தை தொடர்பு அமைச்சின் இந்திய சமூக நடவடிக்கை குழு ஒளிபரப்புத்துறையின் நிர்வாகத்தின் கீழ் அமைத்துள்ளது. பெர்னாமா, ஆர்.டி.எம், தகவல் துறை.
தொடர்பு சமுகத்துறை, தேசிய திரைப்பட தனித்கை துறை ( Finas), மலேசிய பல்லூடக ஆணையம் (SKMM MCMC) ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த புலனத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அரசாங்கத்தின் கொள்கைகள், சிக்கல்கள் மற்றும் திட்டங்கள் உட்பட மற்றும் குறிப்பாக இந்திய சமூகத்திற்கான தகவல்களைப் பரப்புவதற்கான பொறுப்பை இந்த புலனம் கொண்டுள்ளது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இந்திய சமூகம் இந்த WhatsApp சேனலை (KOMUNITI MADANI INDIA MALAYSIA) பின்பற்றும் என நம்புகிறோம். இந்த வாட்சாப்பை பின்தொடர்வோர் குறிப்பாக இந்திய சமூகத்திற்கான அரசாங்க முயற்சிகள் பற்றிய தகல்களை பெறமுடியும் என தொடர்பு அமைச்சின் அதிகாரியான டத்தோ E . சிவபாலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.