புது டெல்லி, அக்டோபர்-19,
இந்தியா, புது டெல்லியில் தீவிரமடைந்து வரும் தூய்மைக்கேட்டு பிரச்னை, புனித யமுனை ஆற்றையும் விட்டு வைக்கவில்லை.
ஆகக் கடைசியாக, டெல்லி காலிந்தி கஞ்ச் (Kalindi Kunj) பகுதியில் யமுனை ஆற்றில் இரசாயண நுரை மிதந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளை நிற பனிப்படலம் போல் ஆற்றின் மேல் நுரை மிதந்து செல்லும் காட்சி வீடியோவில் வைரலாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நுரை உருவாகியிருக்கலாமென நம்பப்படுகிறது.
அதிகளவு இரசாயணம் கலந்திருப்பதால் உடல் ஒவ்வாமை, சருமப் பாதிப்புகள் போன்றவை ஏற்படலாமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து யமுனை ஆற்றோரமாக வாழும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அவசரக் கூட்டத்திற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியாவில் 7 புனித நதிகளில் ஒன்றான யமுனை ஆறு, 800 மைல்கள் அதாவது 1287 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்கிறது.