
குவா மூசாங், அக்டோபர்-22,
கிளந்தான், குவா மூசாங், கம்போங் டாலாம் செண்டோக்கில் கிராம மக்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றதாக நம்பப்படும் சூரியக் கரடி, ஒருவழியாகப் பிடிபட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN பொருத்திய கூண்டில் அக்கரடி இன்று காலை சிக்கியது.
கரடிக்கு பயந்தே நெடு நாட்களாக தோட்டத்து பக்கம் போகாமலிருந்த கிராம மக்களுக்கு, அது பிடிபட்ட செய்தி பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.
பிடிபட்ட கரடி, ஏற்கனவே ஒருவரைத் தாக்கிக் கொன்ற கரடி தானா என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், அது பிடிபட்டதே தங்களுக்கு நிம்மதி தான் என கிராம மக்கள் கூறினர்.
செப்டம்பர் 8-ஆம் தேதி Jerek, Kampung Dalam Senduk-கில் குருவிகளைப் பிடிப்பதற்காக பொறி வைக்கச் சென்ற ஆடவர் கரடி தாக்கி படுகாயமடைந்தார்.
கரடி தன் கூரிய நகங்களால் கீறியதில் 38 வயது அவ்வாடவரின் தலை மற்றும் கால்களில் சதை கிழிந்துபோனது.
குபாங் கெரியான் HUSM மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர், ஒரு வாரம் கழித்து மரணடைந்தார்.