Latestமலேசியா

மலேசிய ஆசிரியர் விருது: முதல் 5 இடங்களில் ஒன்றைப் பிடித்து சாதனைப் படைத்த தமிழ்ப் பள்ளி ஆசிரியை கலைச்செல்வி ஜெயமோகன்

கோலாலம்பூர், அக்டோபர்-25, கோலாலம்பூர், ஜாலான் ஃபிளட்ச்சர் தமிழ்ப் பள்ளி ஆசிரியை கலைச்செல்வி ஜெயமோகன், மலேசிய ஆசிரியர் விருதுக்கு (Malaysia Teacher Prize) இறுதிச் செய்யப்பட்ட ஐவரில் ஒருவராக தேர்வாகி, நமக்கெல்லாம் பெருமைச் சேர்த்துள்ளார்.

கல்வியில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கான மலாய் மொழி மற்றும் கணிதப் பாட ஆசிரியையான அவர், அம்மாணவர்களின் மேம்பாட்டுக்கென சிறப்பான – தெளிவான திட்டத்தை உருவாக்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

பின் தங்கிய மாணவர்களை, மற்ற மாணவர்களுக்கு ஈடாக கல்வியில் மேம்படுத்தி, அவர்களின் வளர்ச்சியைத் தொடந்து கண்காணித்தும் வந்துள்ளார்.

சவால் மிக்க அப்பணியில் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வரும் கலைச்செல்வி, மாநில அளவில் மறுவாழ்வு கல்விக்கான “Champion Teacher” விருதையும் வென்றுள்ளார்.

இந்த நல்லாசிரியர் விருதில் முதல் ஐந்து இடங்களில் வந்ததன் அடிப்படையில், கலைச்செல்வி 5,000 ரிங்கிட்டை பரிசுப் பணமாகப் பெற்றார்.

சபா, பிங்கோரைச் சேர்ந்த Dr Velerie Wheelervon Primus எனும் சிறப்புக் கல்வி ஆசிரியர் முதலிடத்தைப் பிடித்து, 50,000 ரிங்கிட் பரிசைத் தட்டிச் சென்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!