
செப்பாங், பிப்ரவரி-2 – செப்பாங், கோத்தா வாரிசானில் உள்ள பேரங்காடியில் பொது இடத்தில் மனைவியைக் கன்னத்தில் அறைந்து வைரலான ஆடவர், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அங்குள்ள கிளினிக் ஒன்றின் முன்புறம் சனிக்கிழமைக் காலை 10 மணிக்கு அவர் கைதானார்.
இன்று முதல் விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்படுவார் என, செப்பாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் மற்றும் 1994 குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
முன்னதாக வைரலான 29 வினாடி வீடியோவில், பேரங்காடியிலிருந்து வெளியே வரும் ஒரு மாதுவை, தொப்பி அணிந்திருந்த ஆடவர் நெருங்கி பொது மக்கள் முன்னிலையில் அப்பெண்ணின் கன்னத்தில் அறைந்து விட்டுச் சென்றார்.
சம்பவ இடத்திலிருந்து யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் செய்த நேரலையில், தற்செயலாக அச்சம்பவம் பதிவாகியிருந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டது 35 வயது தனது அக்காள் தான் என ஒர் ஆடவர் புகார் செய்ய, போலீஸும் விசாரணையில் இறங்கியது.