Latestமலேசியா

அடைக்கலம் கொடுத்த சீன தம்பதி கொலை; தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய 2 இந்தியப் பிரஜைகள்

புத்ராஜெயா, நவம்பர்-5 – ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அடைக்கலம் கொடுத்த கணவன் மனைவியையே கொன்ற வழக்கில், இந்தியப் பிரஜைகளான இரு சகோதரர்கள் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.

அத்தம்பதியைக் கொலைச் செய்து, சடலங்களை துணிப் பையில் போட்டு கால்வாயில் தூக்கி வீசியக் குற்றச்சாட்டிலிருந்து, 29 வயது Sagar Sharma, 24 வயது Shubham Sharma இருவரையும் புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுதலைச் செய்தது.

அக்கொலைக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட சகோதரர்களுக்கும் தொடர்பில்லை என மூவரடங்கிய நீதிபதிகள் குழு ஒருமனதாக முடிவுச் செய்தது.

அரசு தரப்பின் முக்கிய சாட்சிகளான 2 போலீஸ்காரர்களின் வாக்குமூலங்கள் வலுவானதாக இல்லை என்பதை நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக் காட்டினர்.

எனவே அவ்விருவருமே கொலையாளிகள் என தீர்ப்பளித்து உயர் நீதிமன்றம் இதற்கு முன் விதித்த மரண தண்டனை இரத்துச் செய்யப்படுவதாக, மேல்முறையீட்டு நீதிபதிகள் அறிவித்தனர்.

கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சில் இரு சகோதரர்களும் கதறி அழுதனர்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 மற்றும் 24-காம் தேதிகளில் சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் அந்த சீன தம்பதியைக் கொலைச் செய்ததாக இருவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

பாதுகாவலர்களாக வேலைப் பார்த்து வந்த அச்சகோதரர்கள், அந்த சீன தம்பதியுடனேயே ஒன்றாக வசித்து வந்ததோடு, அவர்களுக்கு தத்துப் பிள்ளைகள் போன்றவர்கள் என, அண்டை வீட்டுக்காரர் கொடுத்த வாக்குமூலத்தையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துகொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!