Latestமலேசியா

வைரலான போர் விமானங்கள் எங்களுடையது அல்ல – அரச மலேசிய ஆகாயப் படை விளக்கம்

கோலாலம்பூர், நவம்பர்-12 – ஏதோ ஒரு துறைமுகத்தில் கிடப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள போர் விமானங்கள் தங்களுடையது அல்ல என, TUDM எனப்படும் அரச மலேசிய ஆகாயப் படை தெளிவுப்படுத்தியுள்ளது.

TUDM-மின் அனைத்து விமானங்களும் அதன் முழுக் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டு, முறையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்படுகின்றன.

எனவே உறுதியாக எதுவும் தெரியாமல் யூகங்கள் அடிப்படையில் இது போன்ற தகவல்களைப் பரப்பி குழப்பத்தை உருவாக்க வேண்டாமென அறிக்கை வாயிலாக TUDM கேட்டுக் கொண்டது.

அமெரிக்கத் தயாரிப்பிலான 6 F-5E போர் விமானங்கள் இருப்பதைக் காட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் முன்னதாக வைரலாகின.

கிள்ளான் துறைமுகத்தில் அவை பதிவுச் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!