தஞ்சோங் மாலிம், நவ 14 – சிலிம் ரீவருக்கு அருகே தாமான் ஸ்ரீ ஜெயாவிலுள்ள Slim Perdana வர்த்தக மையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட புரோட்டோன் Preve காரிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மெத்தபெத்தமின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு ஒரு தம்பதியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். 51.97 கிலோவைக் கொண்ட அந்த போதைப் பொருள் 50 பிளாஸ்டிக் பொட்டலங்களில் இருந்ததாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் khaw Kok Chin தெரிவித்தார்.
சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் அந்த காரை வாடகைக்கு எடுத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளநாட்டு சந்தையில் விநியோகிப்பதற்காக அந்த போதைப்பொருள் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக Khaw தெரிவித்தார். கைதான அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் இம்மாதம் 18 ஆம்தேதிவரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.