Latestமலேசியா

புத்ராஜெயாவில் கோர விபத்து: கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் மரணம்

புத்ராஜெயா, நவம்பர்-21 – புத்ராஜெயா, IOI City Mall பேரங்காடி அருகே கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் மரணமடைந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு அக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த 2 ஆண்கள் 2 பெண்கள் என நால்வர் பயணித்த அந்த Perodua Viva கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது.

அதில் இரு ஆடவர்களும் ஒரு கர்ப்பிணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தீயணைப்பு மீட்புத் துறை உறுதிபடுத்தியது.

உயிரிழந்தவர்கள் முறையே 24 வயது Muhammad Danial Mohd Nuzi, 41 வயது Nurulhuda Ramli, 27 வயது Amizan Sapiie என அடையாளம் கூறப்பட்டது.

காயமடைந்த மற்றொரு பெண்ணும் கர்ப்பிணியே; 28 வயது Nizasuhana Ujang எனும் அப்பெண் படுகாயங்களுடன் புத்ராஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!