கோலாலம்பூர், டிசம்பர்-10, ஸ்ரீ டாமான்சாரா MRT நிலையமருகே சாலையில் சென்ற வாகனத்தின் மீது கல்லெறிந்த ஆடவனை பெட்டாலிங் ஜெயா போலீஸ் தேடி வருகிறது.
அச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நிகழ்ந்ததாக, மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintenden M. Hussin Sollehuddin Zolkifly கூறினார்.
பாதிக்கப்பட்ட வாகனமோட்டி உட்பட இதுவரை யாரிடமிருந்தும் புகார் பெறப்படவில்லை என்றார் அவர்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருப்பின் போலீசைத் தொடர்புகொண்டு உதவுமாறு அவர் கேட்டுகே கொண்டார்.
மற்றவர்களுக்குக் காயம் விளைவிக்கக் கூடிய அது போன்ற நாச வேலைகளுக்கு, ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
முன்னதாக வைரலான 14 வினாடி வீடியோவில் சாலையோரமாக நின்றிருந்த மர்ம ஆடவன், காரை நோக்கி கல்லை எறிவது தெரிந்தது.