புத்ராஜெயா, டிசம்பர்-21, 2024 நவம்பர் வரையிலான கூடுதல் வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அரசு பதிவேட்டில் இடம் பெற்றுள்ள அப்பட்டியல், நவம்பர் 1 முதல் 30 வரை தானியங்கி முறையில் வாக்காளர்களாகப் பதியப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட 39,546 பேரது பெயர்களையும் உள்ளடக்கியுள்ளது.
அது தவிர, வாக்களிக்கும் தொகுதி மாறிய 10,388 பதிவுப் பெற்ற வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் அந்தஸ்து அல்லது பிரிவு மாறிய 1,804 பேரின் பெயர்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
எனவே மேற்கண்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஜனவரி 18 வரையிலான இந்த 1 மாதக் காலக்கட்டத்தில் இந்த கூடுதல் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களையும் விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
MySPR Semak செயலி, Hotline தொலைப்பேசி அழைப்புச் சேவை உள்ளிட்ட 5 வழிகளில் பொது மக்கள் அவ்வாறு செய்யலாம் என, SPR செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் (Datuk Ikmalrudin Ishak) தெரிவித்தார்.