புத்ராஜெயா, ஜனவரி-10, மக்களுக்கானச் சேவையளிப்பை எளிதாக்க, Kiosk Sentuhan MADANI எனும் புதியத் திட்டம் புத்ராஜெயா Alamanda பேரங்காடியில் அறிமும் கண்டுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அதனைத் தொடக்கி வைத்தார்.
கணிப் பொறியகம் எனப்படும் இந்த kiosk இயந்திரங்கள் வாயிலாக ஒரே இடத்தில் 90-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படும்.
தொடக்கக் கட்டமாக சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ, Pos Malaysia, மலேசிய நிறுவன ஆணையமான SSM, TNB, ஊழியர் சேமநிதி வாரியமான EPF, மற்றும் MyDigital ID ஆகிய 6 அரசு நிறுவனங்கள் இந்த kiosk திட்டத்தில் பங்கேற்கின்றன.
டத்தோ ஸ்ரீ அன்வாரும் அவ்வியந்திரங்களை சோதித்துப் பார்த்தார்.
அலுவலக நேரத்திற்கு வெளியேயும் மக்களுக்கு அரசாங்கச் சேவைகள் கிடைக்கும் பொருட்டு, பேரங்காடிகள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள 38 இடங்களில் இந்த kiosk இயந்திரங்கள் நிறுவப்படும்.
அவ்வகையில், Alamanda பேரங்காடியைத் தொடர்ந்து இரண்டாவது இடமாக கோலாலம்பூர், KL Sentral-லில் அடுத்த மாதக் கடைசியில் இந்த Kiosk Sentuhan MADANI நிறுவுப்படும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிந்தனையில் உதித்த இத்திட்டம் 2025 வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.