பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய ஆடவன் கைது

மும்பை , ஜன 20 – இந்தியாவில் மராட்டிய மாநிலம், தானேயில் ( Thane) பாலிவுட் (Bollywood ) நடிகர் சைஃப் அலிகானை ( Saif Ali Khan) அண்மையில் அவரது வீட்டில் கத்தியால் குத்திய ஆடவன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டான் .
முகமட் அலியான் ( Mohammed Aliyan) என்ற அந்த சந்தேக நபர் சைஃப் அலி கான் இல்லத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் Kasarvadavaliயில் உள்ள ஹிராநந்தனி (Hiranandani) தோட்டத்திற்கு அருகில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான் .
பிடிபடுவோம் என்ற பயத்தில் சம்பந்தப்பட்ட நபர் விஜய் தாஸ் (Vijay Das ) என்ற போலி பெயரை பயன்படுயுள்ளான். அவன் ( Thane ) யில் உள்ள மதுபான விடுதியில் நிர்வாக ஊழியராக பணியாற்றி வந்துள்ளான்.
இந்த சம்பவத்தின் போது 54 வயதான சைஃப் அலிகானின் ( Saif Ali Khan) கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் பலமுறை குத்தப்பட்டதில் காயம் அடைந்தார்.
பாந்த்ராவில் (Bandra) உள்ள அவரது வீட்டில் திருட நுழைந்தபோது கடந்த வியாழன் அதிகாலையில் தனிப்பட்ட ஆடவன் ஒருவன் தாக்குதல் நடத்தினான்.
சைஃபர் அலி கான் ( Saif Ali Khan) ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டு லீலாவதி (Lilavati ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது முதுகெலும்பில் இருந்து 2.5 அங்குல நீளமுள்ள பிளேடு அகற்றப்பட்டது. அவர் படிப்படியாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.