Latestமலேசியா

Sports Toto jackpot: ஒரே இரவில் மில்லியனர்களான 60-க்கும் மேற்பட்ட மலேசியர்கள்

கோலாலம்பூர், ஜனவரி-24 – மலேசிய வரலாற்றில் மிகப்பெரிய லாட்டரி ஜேக்போட் Supreme Toto 6/58 குலுக்கலுக்கான 121.7 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகை, ஒரே இரவில் 60-க்கும் மேற்பட்ட மலேசியர்களை மில்லியனர்களாக ஆக்கியுள்ளது.

அந்த ஜேக்போட் பரிசுத் தொகையின் பெரும்பகுதியான 104.77 மில்லியன் ரிங்கிட்டை, சிலாங்கூரைச் சேர்ந்த 6 பேரும், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 45 பேரும் வெற்றிக் கொண்டனர்.

Sports Toto Malaysia Lottery Sdn Bhd இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அவ்விவரங்களைத் தெரிவித்துள்ளது.

பெரிய அதிர்ஷ்டசாலிகளில், 34,923,156.10 ரிங்கிட் பரிசுப் பணத்தை வென்ற சிலாங்கூரைச் சேர்ந்த 30 வயது தொழில்முனைவரும் அடங்குவார்.

5, 38, 39, 42, 46, மற்றும் 57 ஆகிய வெற்றி எண்களைக் கொண்ட System 12 டிக்கெட்டை வாங்கியதால், 269,168 ரிங்கிட் System Play Bonus தொகையையும் அவர் பெற்றார்.

வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே, அதாவது ஜேக்போட் குலுக்கல் நாளான ஜனவரி 10-ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்பு, தனது சிந்தனையில் அவ்வெற்றி எண்கள் உதித்ததாக அவ்வாடவர் கூறினார்.

அப்போதே, ஜேக்போட் பரிசை வெல்லப் போவது தாம் தான் என உள்மனது கூறியதாக தெரிவித்தவர், பரிசுத் தொகையை முதலீடு செய்து சொத்தைப் பெருக்கப் போவதாகச் சொன்னார்.

இவ்வேளையில், நெகிரி செம்பிலாலின் 45 பேர் 34,923,156.10 ரிங்கிட் பரிசுப் பணத்தையும் System Play bonus தொகையான 220,240 ரிங்கிட்டையும் பகிர்ந்துக் கொள்ளவிருக்கின்றனர்.

Jackpot குலுக்கல் வரலாற்றில் இதற்கு முந்தைய ஆக உயரியப் பரிசுத் தொகை, 2022-ல் பதிவான 97.75 மில்லியன் ரிங்கிட்டாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!