
கோலாலம்பூர், ஜன 24 – மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒருconvenience storeரில் பல்வேறு வகையான 366 சாண்ட்விச்களை (sandwic) விநியோகம் சப்ளை செய்த ரொட்டி நிறுவனம் மற்றும் இயக்குநர் மீது போலி ஹலால் முத்திரையை பயன்படுத்தியதாக 12 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
ஷேக் அண்ட் பேக் கஃபே Sdn Bhd இன்
( Shake and Bake Cafe Sdn Bhd, ) இயக்குநரான
65 வயதுடைய இவி சர்ன் யுன் ( Ewe Sarn Yeun, ) 366 சாண்ட்விச் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்தார் என்பது ஆறு குற்றச்சாட்டுக்களில் கண்டறியப்பட்டது.
இது மலேசிய ஹலால் முத்திரையைப் பயன்படுத்தி விவரிக்கப்பட்ட ஆறு சுவைகளை உள்ளடக்கிய விதிமுறைக்கு முரணாக முஸ்லிம்கள் உணவை உட்கொள்ளலாம் என்பதைக் காட்டுகிறது.
உணவுப் பொருட்களில் 50 கலப்பு Tuna மீன் சாண்ட்விச்கள் , 43 கலப்பு உருளைக்கிழங்கு சாண்ட்விச்கள், 77 கலப்பு சிக்கன் சாண்ட்விச்கள்,
74 முட்டை மாயோ சாண்ட்விச்கள்; 66 Ham & Cheese சாண்ட்விச்கள் மற்றும் 56 Chili Crabstick சாண்ட்விச்கள் ஆகியவவையும் அடங்கும்.
நீதிபதி ஷர்லிசா வார்னோ (Sharliza Warnoh) மற்றும் நூர் ருசிலாவதி முகமட் நோர் (Noor Ruzilawati Mohd Nor) ஆகியோர் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவின் நிரந்தர குடியிருப்புவாசி தகுதியை கொண்டிருக்கும் Ewe Sam Yeun மறுத்தார்.
அனைத்து குற்றங்களும் Sunway Damansara வில் Shake and Bake Cafe Sdn Bhd இல் இம்மாதம் 10 ஆம் தேதி மதியம் மணி 12.50 அளவில் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் Ewe Sam Yeun னுக்கு 130,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்ததோடு அவரது கடப்பிதழை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.