
சுங்கை பட்டாணி, ஜனவரி-30, நாட்டில் தைப்பூசத் திருவிழாவுக்கு பிரசித்திப் பெற்ற முருகன் திருத்தலங்களில் கெடா, சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானமும் அடங்கும்.
சிலாங்கூர் பத்துமலை, பினாங்கு தண்ணீர் மலை தைப்பூசங்களுக்கு அடுத்து பெரிய விழாவாகக் கொண்டாப்படும் சுங்கைபட்டாணி தைப்பூச விழாவில், ஒவ்வொரு வருடமும் 3 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இவ்வாண்டு தைப்பூசம் இன்னும் 2 வாரங்களில் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சுங்கைபட்டாணி தைப்பூச திருவிழாவுக்கான மூகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.
அதில் 200-கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நாளை ஜனவரி 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேவஸ்தானத்தில், கொடியேற்றும் வைபவம் நடைபெறுவதால் பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.
சுங்கை பட்டாணி தைப்பூசம் கடந்தாண்டை விட சிறப்பாக, பக்தர்களுக்கு வசதியாக அமைவதற்கு தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.