Latestமலேசியா

பினாங்கு வர்த்தக வளாகத்திலிருந்து கீழே விழுந்த ஆடவர் காயம்

ஜோர்ஜ் டவுன் , பிப் 5 – பினாங்கு , ஜோர்ஜ் டவுன் , Persiaran   Gurneyயில் வர்த்தக வளாகத்தின் மேல் மாடியிலிருந்து  கீழ்த்தளத்தில்  விழுந்த  ஆடவர்  ஒருவர்  காயம்   அடைந்தார். 

இன்று பிற்பகல்  2 மணியளவில் நடந்த அந்த சம்பவத்தினால்  அந்த வர்த்தக தொகுதியில்  பொருட்களை வாங்க வந்தவர்களில் பலர்  பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.  

எனினும் அந்த நபர் எப்படி கீழே விழுந்தார் என்று உடனடியாக தெரியவில்லை.   ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம்  அந்நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள்  சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!