![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/MixCollage-06-Feb-2025-01-21-PM-4121.jpg)
பெந்தோங், பிப் 6 – இன்று காலை ஜாலான் Karak Lamaவில் விவசாய சுற்றுலா மையத்திற்கு அருகே தரையிறங்கியபோது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அதன் மின்விசிறி பிளேட்டால் (blade) தாக்கப்பட்டதன் விளைவாக இந்தோனேசியாவைச் சேர்ந்த பொறியாளர் பின்சன் ரெஸ்கி செம்பிரிங் ( Finsen Reskey Sembring) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் பொறியியலாரக பணிபுரிந்துவந்த மேடானைச் சேர்ந்த 27 வயதுடைய Finsen தலையில் ஏற்பட்ட காயத்தினால் மரணம் அடைந்தார்.
அந்த விபத்தில் ஹெலிகாப்டர் ஓட்டுனர் சொற்பமான காயத்திற்கு உள்ளானதாக Bentong மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் ஸைய்ஹாம் முகமட் கஹார் ( Zaihan Mohd Kahar ) தெரிவித்தார்.
44 வயதுடைய அந்த ஹெலிகாப்டர் ஓட்டுனரும் இந்தோனேசிய பிரஜை என நம்பப்படுகிறது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டர் மின் இணைப்பை பொருத்தும் வேலைக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.