
குவாந்தான், பிப்ரவரி-13 – பஹாங், பெக்கானில் Kuala Sungai Badong Merchong கடற்கரையோரத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு 7 மணி வாக்கில் மீனவர்கள் அதனைக் கண்டெடுத்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
Badong, Merchong, Nenasi ஆகிய சுற்று வட்டார கிராம மக்களிடம் கேட்டறிந்த வரையில், யாரும் காணாமல் போகவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக, பெக்கான் போலீஸ் தலைவர் Superintendan Mohd Zaidi Mat Zin தெரிவித்தார்.
இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது காணாமல் போயிருந்தால், மரபணு பரிசோதனைக்காக அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.