
ஜோகூர் பாரு, பிப்ரவரி-14 – ஜோகூர் பாருவில் கேளிக்கை மையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 23 பேர் கைதாகினர்.
GRO எனப்படும் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவைகளை வழங்கும் 21 வெளிநாட்டுப் பெண்களும் அவர்களில் அடங்குவர்.
அவர்களிடம் முறையான வேலை பெர்மிட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த GRO சேவைக்கு வெவ்வேறு கட்டணங்கள் விதிக்கப்பட்டு வந்துள்ளன.
கைதான எஞ்சிய இருவரில் ஒருவர் கேளிக்கை மையத்தின் முகப்பிடப் பணியாளர்; இன்னொருவர் கஞ்சா வைத்திருந்த உள்ளூர் ஆடவர்.
அக்கேளிக்கை மையம் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளதோடு, வேலை பெர்மிட் இல்லாத கள்ளக்குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டதாக, ஜோகூர் பாரு உத்தாரா போலீஸ் கூறியது.
கைதான வெளிநாட்டுப் பெண்கள் பிப்ரவரி 26 வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.