Latestமலேசியா

மலைப்பாம்பை வளர்ப்பதற்கும் வைத்திருப்பதற்கும் லைசென்ஸ் தேவை – வனவிலங்கு பூங்கா வலியுறுத்து

கோலாலம்பூர், பிப் 14 – தனிப்பட்ட நபர்கள் எவரும் மலைப்பாம்பை வளர்க்கவோ அல்லது அதனை வைத்திருக்கும் நோக்கத்தை கொண்டிருந்தால் Perhilitan எனப்படும் வனவிலங்கு பூங்காத்துறையின் லைசென்ஸ் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக மலைப்பாம்புகள் இருப்பதே இதற்கான காரணம் என தீபகற்ப மலேசியாவின் Perhilitan தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் காதீர் அபு ஹசிம் ( Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.

அதோடு லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மலைப்பாம்பை வைத்திருந்தால் அல்லது அதனை வளர்த்து வருபவர்கள் எங்காவது விடுவதற்கு முன்வந்தால் Perhilitan லைசென்ஸ அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும் .

சட்டப்பூர்வ லைசென்ஸ் இன்றி வலவிலங்குகளை வளர்த்து அதனை எங்காவது விட்டால் வனவிலங்கு தொடர்பான சட்டத்தின் கீழ் அமலாக்க நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்துல் காதீர் கூறினார்.

சுபாங் ஜெயா (Subang Jaya) , புத்ரா ஹைட்ஸ் (Putra Heights) , ஜாலான் பெர்சியாரான் புத்ரா பெர்மாயில் (Jalan Persiaran Putra Permai) உள்ள ஒரு கால்வாயில் மூன்று மலைப்பாம்புகளை விட்டதாக நம்பப்படும் இரண்டு தனிப்பட்ட நபர்களை வனவிலங்கு பூங்காத்துறை கைது செய்ததாக இதற்கு முன் ஊடகம் ஒன்றில் தகவல் வெளியானது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகேயுள்ள வீடு ஒன்றில் 35 மற்றும் 53 வயதுடை அந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!