
சுங்கை பட்டாணி, பிப்ரவரி-15 – இந்துப் பணிப்படையின் மேற்பார்வையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூசம் உள்ளிட்ட சமய விழாக்களில் அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இது தமக்கு பெருமிதம் அளிப்பதாக அரசு சாரா இயக்க ஆலய ஒருங்கிணைப்புத் தலைவரும் சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான Dr குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
குறிப்பாக சமயத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை இந்துப் பணிப் படை துணிச்சலாக எதிர்கொண்டது; அதனை மக்கள் ஏற்றுக் கொண்டதும் மகிழ்ச்சியே.
இதனால் விழாக்காலங்களில் சமயத்தை இழிவுப்படுத்தும் பல நடவடிக்கைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
கெடா, சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் நூலகத்தில் நடைபெற்ற இந்துப் பணிப்படையின் 13-ஆவது ஆண்டு நிகழ்வுக்குத் தலைமைத் தாங்கி பேசிய போது Dr குணராஜ் அவ்வாறு சொன்னார்.
பணிப்படையினரில் சுங்கை பட்டாணி பணிப்படை தனித்துவம் வாய்ந்திருப்பதாகவும் அவர் பாராட்டினார்.