Latestமலேசியா

குவாந்தானில் உணவு அனுப்பச் சென்ற பெண் கொல்லப்பட்ட சம்பவம்; 53 வயது சந்தேக நபர் கைது

குவாந்தான், பிப்ரவரி-15 – பஹாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலமருகேயுள்ள ஆற்றங்கரையில், பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

வீடற்றவரான 53 வயது ஆடவர் இன்று அதிகாலை குவாலா திரங்கானுவில் உள்ள ஒரு வீட்டில் கைதானார்.

அது அவரது குடும்ப உறுப்பினரின் வீடாகும்; பொது மக்கள் கொடுத்தத் தகவலின் அடிப்படையில் அவ்வாடவர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபரிடமிருந்து ஒரு மோதிரம், ரொக்கப் பணம், ஆடைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அப்பெண்ணின் படுகொலை சம்பவத்தைத் தீர்க்க முடியுமென, குவாந்தான் போலீஸ் தலைவர் ACP Wan Mohd Zahari Wan Busu அறிக்கையொன்றில் கூறினார்.

கொலைக் குற்றம் தொடர்பில் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவிருக்கின்றது.

Cash on delivery வியாபாரியான 37 வயது Norshamira Zainal, சந்தேக நபர் ஆர்டர் செய்திருந்த நெத்திலி சம்பலைக் கொடுப்பதற்காக புதன்கிழமை இரவு சென்றவர் வீடு திரும்பவேயில்லை.

மறுநாள் காலை ஆற்றங்கரையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சோதனையில், அப்பெண்ணின் உடலில் காயத் தளும்புகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!