
நெகிரி செம்பிலான், பிப்ரவரி-19 – நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு சிறு பட்டணத்தில் கடையிலிருந்து நாசி லெமாக் வாங்கிய வாடிக்கையாளர், அதில் வெள்ளரிக்காயின் நுனிப் பகுதி சிறு துண்டாக வைக்கப்பட்டிருந்தது கண்டு ‘கொதித்துப்’ போயிருக்கிறார்.
பசிக்கிறதே என நாசி லெமாக் வாங்கினேன்; அதில் நெத்திலி இல்லை பரவாயில்லை, கச்சான் இல்லை அதுவும் பரவாயில்லை; நான் கோபப்பட மாட்டேன்; ஆனால் இப்படித் தான் வெள்ளரிக்காயின் நுனிப் பகுதியை வைப்பதா என அவர் கேள்வியெழுப்பினார்.
கோபமடைந்தாலும், anacayang82 என்ற டிக் டோக் கணக்கில் அப்பெண் பதிவேற்றிய வீடியோ வலைத்தளவாசிகளின் சிரிப்பை வரவழைத்து.
நெகிரி செம்பிலான் வட்டார வழக்கில் சற்று நகைச்சுவைக் கலந்த தோரணையில் அவர் பேச்சு இருப்பதே அதற்குக் காரணம்.
வெள்ளரிக்காய் முடிந்து விட்டால் இப்படித் தான் நுனிப் பகுதியை வைப்பீர்களா என கேள்வி எழுப்பிய அவ்வாடிக்கையாளர், வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சமாவது மனசாட்சியோடு நடந்துக் கொள்ளுங்களேன் என்றார்.
வலைத்தளவாசிகளும் நகைச்சுவையாகவே கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
வழக்கமாக வெள்ளரிக்காயின் நுனிப் பகுதியை வெட்டி வீசு வீடுவோம்; ஆனால் அதனை ‘கஞ்சத்தனமாக’ நாசி லெமாக்குடன் வைத்து விற்கலாம் என்பது இப்போது தான் தெரிகிறது என ஒருவர் பதிவிட்டது கவனத்தை ஈர்த்தது.