
கோத்தா கினாபாலு, மார்ச்-8 – சபா, கோத்தா கினாபாலுவில் கடை வீட்டின் முதல் மாடி காங்கிரீட் தரை திடீரென சரிந்து மேலே விழுந்ததில், ஒரு குடும்ப மாது படுகாயமடைந்தார்.
கொம்ளெக்ஸ் செகாமாவில் நேற்றிரவு 8 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது, Wang Way எனும் 55 வயது அம்மாது ஓர் உணவகம் அமைந்துள்ள தரைத் தளத்தில் இருந்தார்.
தகவல் கிடைத்து வந்துசேர்ந்த தீயணைப்பு-மீட்புத் துறை, காங்கிரீட் தரையின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அம்மாதுவைக் காப்பாற்றியது.
அந்த முதல் மாடி தங்குமிடமாகும்; எனினும் அங்கு யாரும் காயமடையவில்லை.
காங்கிரீட் சரிந்ததில், முதல் மாடி தரையில் பெரிய குழியே ஏற்பட்டது.
பழையக் கட்டடம் என்பதால் காங்கிரீட் தரை வலுவிழந்து போனதே அது சரிந்து விழுந்ததற்குக் காரணம் என நம்பப்படுகிறது.