
தும்பாட், பிப்ரவரி-19 – தாய்லாந்துக்குக் கடத்தப்படவிருந்ததாக நம்பப்படும் 88,000 தேங்காய்களைப், பொது நடவடிக்கைப் படையான PGA ஒரு லாரியிலிருந்து பறிமுதல் செய்துள்ளது.
2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அத்தேங்காய்கள், கிளந்தான், தும்பாட், கம்போங் பூலாவ் ஊலாரில் உள்ள ஒரு கிடங்கில் கைப்பற்றப்பட்டன.
Ops Taring Wawasan சோதனையில் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக PGA தென் கிழக்கு மண்டப் பிரிவு கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அசான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
அந்த சேமிப்புக் கிடங்குக்கு, முறையான தேங்காய் கொள்முதலுக்கான உரிமமோ ஆவணங்களோ இல்லையென கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தேய்காய் கையிருப்பை தாய்லாந்துக்கு அனுப்பும் பணியிலிருந்த 26 முதல் 43 வயது ஆடவர்கள் 5 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தேங்காய்களும் சந்தேக நபர்களும் மேல் நடவடிக்கைக்காக FAMA கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
1965-ஆம் ஆண்டு FAMA சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.