Latestமலேசியா

இந்துக்களை மீண்டும் இழிவுப்படுத்துவதா? சம்ரி வினோத் மீது ராயர் போலீஸில் புகார்

கோலாலம்பூர், மார்ச்-6 – தைப்பூசத்தை இழிவுப்படுத்தும் வகையில் இஸ்லாமிய மத போதகர் சா’ம்ரி வினோத் facebook-கில் பதிவேற்றியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் அப்புகார் செய்யப்பட்டது.

தைப்பூசக் காவடியாட்டத்தை மட்டும் அவர் இழிவுப்படுத்தவில்லை; மாறாக, சுபாங் ஜெயா சீஃபீல்ட் ஆலயக் கலவரத்தில் தீயணைப்பு வீரர் Adib உயிரிழந்த சம்பவத்தையும் தேவையின்றி தொடர்படுத்தி பேசியுள்ளார்.

சா’ம்ரியின் பொற்றுப்பற்றத்தனமான இச்செயல், பல்லின மக்கள் வாழும் நாட்டில் மோதல்களை உண்டாக்கி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீய நோக்கத்தைக் கொண்டது.

எனவே சா’ம்ரி மீது உடனடி நாடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு, தனது போலீஸ் புகாரில் ராயர் கேட்டுக் கொண்டார்.

‘வேல் வேல்’ என உச்சரித்து வீடியோவில் ஆட்டம் போட்ட ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் மூவர் விசாரணைக்கு ஆளாகியிருப்பது குறித்து கருத்துரைக்கையில் சா’ம்ரி வினோத் அந்த சர்ச்சைக் கருத்தைப் பதிவேற்றியுள்ளார்.

பேய் பிடித்தது போலவும் மது போதையில் இருப்பது போலவும், ‘வேல் வேல்’ எனக் கூறிக் கொண்டு ஆடும் போது இந்துக்களுக்கு அது இழிவாகத் தெரியவில்லை.

இந்துக்கள் செய்வதைப் பார்த்து தான் மற்றவர்களும் வெறுமனே பின்பற்றுகிறார்கள்; ஆனால் மற்றவர் செய்யும் போது மட்டும் அது அவர்களுக்கு இழிவாகப் படுகிறது; மற்றவர் இழிவுப்படுத்தக் கூடாது என்றால், அவ்வாறு செய்வதை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்; இல்லையென்றால் ஏளனம் செய்கிறார்களே என கூப்பாடு போடாதீர்கள்” என சா’ம்ரி வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!