நடுவானில் விமானப் பணிப் பெண்ணிடம் ஆணுறுப்பைப் காட்டிய இந்தோனேசிய இளைஞன் சிங்கப்பூரில் கைது

சிங்கம்பூர், மார்ச்-8 – சிங்கப்பூருக்கான பயணத்தின் போது நடுவானில் விமானப் பணிப் பெண்ணிடம் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட இந்தோனீசிய இளைஞன் கைதாகியுள்ளான்.
ஜனவரி 23-ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட பெண், உணவு பரிமாற வந்த போது 23 வயது அவ்வாடவன் அந்த சேட்டையை புரிந்துள்ளான்.
அதுவும், போர்வையால் உடலை மூடிக் கொண்டு, நடப்பவற்றை வீடியோவாகப் பதிவுச் செய்ய கைப்பேசியையும் அவன் தயாராக வைத்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சாங்கி விமான நிலையம் வந்திறங்கிய கையோடு போலீஸார் அவனைக் கைதுச் செய்தனர்; அவனது கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலியல் சீண்டல் தொடர்பில் அவன் மீது மார்ச் 12 ஆம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.