Latestமலேசியா

பிறப்புப் பத்திர ஊழலில் 49,000 ரிங்கிட் இலஞ்சம் கைமாறியதாக MACC சந்தேகம்

புத்ராஜெயா, மார்ச்-15 – தாமதமாகப் பிறப்புப் பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களை உட்படுத்திய ஊழல் தொடர்பில் கைதான பெண் வழக்கறிஞர், விண்ணப்பத்தாரர்களிடமிருந்து முன்கூட்டியே இலஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்ட பிறகே விண்ணப்ப படிவங்களைப் பரிசீலித்து வந்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் நம்பத்தகுந்த வட்டாரம் அதனை அம்பலப்படுத்தியது.

நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 7 பிறப்புப் பத்திரங்களும் குழந்தை சிகிச்சை அட்டையொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்கு எதுவும் முடக்கப்படவில்லை; ஆனால் கைமாறிய இலஞ்சப் பணம் 49,000 ரிங்கிட் என மதிப்பிடப்படுவதாக அவ்வட்டாரம் கூறியது.

இந்த பிறப்புப் பத்திர ஊழல் தொடர்பில், MACC கடந்த புதன்கிழமை 16 பேரைக் கைதுச் செய்தது.

டத்தோ ஸ்ரீ பட்டம் கொண்ட ஒரு மருத்துவர், ஓர் அரசு ஊழியர், சட்ட வழக்கறிஞர், முகவர்கள், விண்ணப்பத்தாரர்கள் உள்ளிட்டோர் அவர்களில் அடங்குவர்.

20 முதல் 70 வயதிலான அவர்கள், கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட Outlander மற்றும் Op Birth சோதனைகளில் சிக்கினர்.

2013 முதல் 2018 மற்றும் 2023 முதல் 2025 வரை இலஞ்சம் கொடுக்கல் வாங்கல் மூலம் போலி பிறப்புப் பத்திரங்கள் வெளியிடப்பட்டு வந்ததன் பேரில் அவர்கள் கைதாகினர்.

நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேளை, 12 பேர் மார்ச் 16 வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!