
சிங்கப்பூர், ஏப்ரல்-3- சிங்கப்பூரில் மசூதிகளுக்கு வெளியே ஏராளமான முஸ்லீம்களை கொல்வதற்குத் திட்டம் தீட்டிய சந்தேகத்தில், பதின்ம வயது ஆடவன் கைதாகியுள்ளான்.
17 வயது அப்பையன் கடந்த மாதம் கைதுச் செய்யப்பட்டதை, உள்நாட்டு பாதுகாப்புத் துறையான ISD உறுதிப்படுத்தியது.
‘கிழக்காசிய மேலாதிக்கவாதியாக’ தன்னைக் காட்டிக் கொள்ளும் அவ்வாடவன், வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பிறகு குறைந்தது 5 மசூதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவன், 2019-ல் நியூ சிலாந்து மசூதிகளில் இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய வெள்ளையின வெறியன் Brenton Tarrant-டை ஹீரோவாகக் கொண்டுள்ளான்.
Tarrant கொன்றதை விட அதிகமாக அதாவது குறைந்தது 100 பேரையாவது கொல்வதற்கு இந்த உள்ளூர் ஆடவன் இலக்கு வைத்திருந்ததாக, சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.ஷண்முகம் கூறினார்.
முஸ்லீம்களைக் கொல்வதை சமூக ஊடகங்களில் நேரலை செய்யவும் அவன் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.