Latestமலேசியா

‘குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் பக்கா ‘மாஸ்’ ஹீரோவாக திரும்பிய அஜித்; LFS PJ-வில் களைக்கட்டிய சிறப்புக் காட்சி

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) திரைப்படம் நேற்று வெளியீடு கண்டது.

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படமென்பதால், உலகம் முழுவதும் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் அஜித்துடன் கதாநாயகியாக திரிஷா, வில்லனாக அர்ஜூன் தாஸ், முக்கிய க் கதாபாத்திரங்களில் ஹிந்தி நடிகர் ஜேக்கி ஷ்ராப், சிம்ரன், யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மலேசியர்களுக்கே பெருமை சேர்க்கும் வகையில் உள்ளூர் மூத்த பாடகர் டார்க்கியும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே, Five Star Trading நிறுவனத்தின் வெளியீட்டில் பெட்டாலிங் ஜெயா லோட்டஸ் திரையரங்கில் இப்படத்தின் முன்னோட்ட காட்சியை சிறப்பாக நடந்தேறியது.

இந்த நிகழ்வில் Five Star Trading நிறுவனத்தின் மேலாளர் கருணாமூர்த்தி, DMY Creations நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ’ மொகமட் யூசொஃப், Antenna Entertainments நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஆனந்த், டத்தோ ஸ்ரீ ஞானராஜா, டத்தோ கீதாஞ்சலி ஜி மற்றும் XGEN நிறுவனத்தின் தலைவர் மொகமட் யாஹியா பாய் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மலேசியக் கலைஞர்களும் பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தைக் கொண்டாடினர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் முழுக்க முழுக்க வணிக ரீதியிலான படத்தில் நடித்திருப்பது மலேசிய அஜித் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!