Latestமலேசியா

SPM தேர்வில் இந்திய மாணவர்கள் சிறந்த தேர்ச்சி; ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் உங்களின் முதல் தேர்வாக கொள்ளுங்கள் – விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஏப்.24 நாடு தழுவிய நிலையில் SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில் உயர்க்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தங்களது முதன்மை தேர்வாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை நாடாலாம் என ம.இ.கா வின் தேசிய தலைவரான டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட துறைகளில் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இப்பல்கலைக்கழகம் இதுவரை 20,000 த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியும் உள்ளது.

இங்கு படித்த பலர் இன்று மருத்துவர்களாக இருக்கின்றனர். ஆகையால், மாணவர்கள் குறிப்பாக இந்திய மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழங்கும் கல்வி வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இம்முறை அதிகமான இந்திய மாணவர்கள் SPM தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கும் அதேவேளையில் குறைந்த அடைவு நிலை பெற்ற மாணவர்கள் மனம் தளராமல் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு வழி காட்ட ம.இ.கா தயாராக இருக்கிறது.

மாணவர்கள் ம.இ.காவின் டேஃப் கல்லூரியில் இணைந்து தாங்கள் விரும்பும் துறையில் பயில்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். இது தொடர்பாக ம.இ.கா கல்விக்குழுவிடம் ஆலோசனை பெறலாம் என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஒரு மாணவனுக்கு உயர்கல்வி என்பது அவனது வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும் ஒரு வாய்ப்பாகும். இது குறித்து தீவிரமாக ஆலோசித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் மெட்றிக்குலேஷன் உட்பட பல்கலைக்கழகங்களில் உயர்க் கல்வியை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளில் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் உதவியையும் வழங்குவதற்கு ம.இ.கா கல்விக் குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!