Latestமலேசியா

அப்பாவும் மகளும் ஒரே நேரத்தில் SPM தேர்வில் A-க்களை ‘அள்ளிய’ இரகசியம்

ஏப்ரல்-26- 2024 SPM தேர்வு முடிவுகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதை நாம் கண்டோம்.

அதில் தந்தையும் மகளும் ஒன்றாக தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்றதும் அடங்கும்.

பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் மருத்துவ மேற்பார்வையாளராக உள்ள 58 வயது ஆர். பாஸ்கரன், அவரின் 18 வயது மகள் தான்யா இருவருமே அவர்களாவர்.

தந்தை அனைத்து 7 பாடங்களிலும் A-க்களைப் பெற்ற வேளை, கடைக்குட்டி மகள் 11 A-க்களை அள்ளினார்.

இந்த தந்தை – மகளின் வெற்றிக்கான இரகசியங்களைத் தெரிந்துகொள்ள வணக்கம் மலேசியா அவர்களை நேரில் சந்தித்தது.

இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்புகளை எல்லாம் முடித்த பின்பும், ஒரு சவாலாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் இம்முயற்சியில் இறங்கியதாக பாஸ்கரன் சொன்னார்.

அதுவும் மகளுடன் சேர்ந்தே படித்து தேர்வில் அமர்ந்தது பெரிய அனுபவம் என்றார் அவர்.

டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே You Tube வழியாகப் படித்து தேர்வுக்கு இருவரும் தயாராகி வந்துள்ளனர்.

அதில் சில சிரமங்களும் இருக்கவே செய்தன என வணக்கம் மலேசியாவிடம் இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

என்றாலும் தாங்கள் போட்ட உழைப்புக்கு நிச்சயம் அனைத்துப் பாடங்களிலும் A கிடைக்குமென்றே இருவரும் எதிர்பார்த்துள்ளனர்.

தேர்வு முடிவு கிடைத்த போது அடைந்த எல்லையில்லா ஆனந்தம் குறித்தும் தந்தையும் மகளும் பகிர்ந்தனர்.

அடுத்து என்ன திட்டம் என்பது குறித்தும் வணக்கம் மலேசியா அவர்களிடம் கேட்டது.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்” என்பது வள்ளுவரின் வாக்கு.

ஆனால் இங்கு தந்தையும் மகளும் அவையில் ஒன்றாக முந்தியிருந்து அரிய சாதனைப் படைத்துள்ளனர்.

சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை பாஸ்கரனும், தந்தைக்கு உதவி தானும் சாதிக்க முடியுமென்பதை தான்யாவும் நிரூபித்து நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகியுள்ளனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!