
மஞ்சோங், ஏப்ரல்-30, பேராக், மஞ்சோங்கில் கைப்பேசியை சார்ஜ் செய்யும் 14 ரிங்கிட் கேபிள் வயரைத் திருடிய 2 பெண்கள், விசாரணைக்காக 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர் செய்த புகாரின் அடிப்படையில், திங்கட்கிழமை பிற்பகலில் இருவரும் கைதாகினர்.
சந்தேக நபர்கள் முன்னதாக கடைக்கு வந்து, சார்ஜர் வாங்குவது போல் பேசியுள்ளனர்.
புகார்தாரரான கடைப் பணியாளரும் சார்ஜரை திறந்து காட்டி விளக்கியுள்ளார்.
அதில் அதிருப்தி அடைந்தவர் போல, இரு பெண்களில் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் இடது கன்னத்தில் சட்டென அறைந்து விட்டார்; அவர் அணிந்திருந்த தூடோங்கையும் பிடித்து இழுத்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் சார்ஜரை திருடிக் கொண்டு ஓடினர்.
அறை வாங்கியப் பெண்ணின் இடது கன்னம் கன்றிப் போனது.
அவ்விரு சந்தேக நபர்களின் ‘அடாவடி’ CCTV கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளது