
புது டெல்லி, ஜூன்-17 – புது டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் Boeing 787-8 Dreamliner விமானம், தொழில்நுட்ப கோளாறால் ஹோங் கோங்கிற்கே திரும்பியது.
முன்னதாக நேற்று நண்பகல் 12.20 மணிக்கு ஹோங் கோங்கிலிருந்து அந்த AI315 விமானம் புறப்பட்டது.
22,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அது இறங்கத் தொடங்கியது.
இதனால் பாதுகாப்புக் கருதி, பயணத்தைத் தொடருவதில்லை என முடிவெடுத்த விமானி, கட்டுப்பாட்டு கோபுரத்திடம் அத்தகவலைத் தெரிவித்தார்.
பிறகு 1.15 மணியளவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஒரு மிகுந்த முன்னெச்சரிக்கையாகவே அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுருக்கமாகக் கூறிய ஏர் இந்தியா, மேற்கொண்டு விவரங்களை வெளியிடவில்லை.
கடந்த வாரம் இதே இரகத்திலான Boeing விமானமொன்று, லண்டனுக்குப் புறப்பட்ட சில நிமிடங்களில் அஹமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது.
அதில் ஒரேயொருவரைத் தவிர மற்ற அனைத்து 241 பயணிகளும் கொல்லப்பட்டனர்.