
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 1 – அண்மையில் மலேசிய இராணுவ படையில், புதிய lieutenant-general ஜானி லிம்மின் பதவி உயர்வு குறித்து இனவெறி சார்ந்த சர்ச்சைமிக்க உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் ஆடவரின் வாக்குமூலத்தை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பதிவு செய்துள்ளது.
அமைதியின்மையை மற்றும் தேசிய ஒற்றுமையை அச்சுறுத்தும் பதிவுகளை வெளியிட்ட அந்த நபரை MCMC விசாரணைக்கு அழைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஆடவனின் கைப்பேசி மற்றும் ‘சிம்’ கார்டையும் பறிமுதல் செய்துள்ளது.
இந்த வழக்கு தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 500,000 ரிங்கிட் அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இனம், மதம் மற்றும் அரச குடும்ப உள்ளடக்கங்களை பதிவேற்றவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று MCMC பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது..
இந்நிலையில் சுங்கை பூலோ பாஸ் கட்சியின் தலைவர் ஜஹாருதீன் முகமது, அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் மலேசியாவில் சீன பிரதமர் பதவி வகிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று முகநூலில் பதிவேற்றிய சிறிது நேரத்திலேயே அவர் அதை நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.