
கோலாலம்பூர், ஜூலை 4 – இன்று காலை சுபாங் அலாம் எல்.ஆர்.டி நிலையத்தில் அதன் தண்டவாளப் பகுதியில் அத்துமீறி நுழைந்த தனிப்பட்ட நபர் ஒருவர் தனக்குத்தானே காயம் விளைவித்துக்கொள்ள முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
காலை மணி 8.02க்கு நடந்த சம்பவத்தில், ரயில் நிலைய நிறுத்தத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அந்த பயணி தண்டவாளப் பகுதியில் குதித்ததாக ரேபிட் ரெய்ல் சென்டிரியான் பெர்ஹாட் ( Rapid Rail ) தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை மற்றும் போலீஸ் குழுவினரைப் கொண்ட மீட்புக் குழு சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அந்த நபரை வெற்றிகரமாக மீட்டபோதிலும் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் சிகிக்சைக்காக கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என முகநூலில் பதிவிட்ட அறிக்கையில் Rapid Rail தரப்பினர் தெரிவித்தனர்.