
ஷா ஆலாம், ஜூலை-7 – பிரதமர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விலகக் கோரி, சிலாங்கூர் ஷா ஆலாமில் நேற்று 300-க்கும் பேற்பட்டவர்கள் மறியல் பேரணி நடத்தினர்.
செக்ஷன் 9 வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்ற அந்த அமைதி மறியல், மக்களைப் பாதிப்பதாக அக்குழு கூறிக் கொண்ட சில விவகாரங்கள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது.
வாழ்க்கைச் செலவின உயர்வு, ஜூலை 1 முதல் விரிவாக்கம் கண்ட SST வரி உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
போலீஸ் மேற்பார்வையில் காலை 8 மணிக்குத் தொடங்கிய பேரணியில், ‘Turun Anwar’, ‘Rakyat Susah’, ‘Rakyat Terbeban’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைககள், போஸ்டர்கள் போன்றவற்றை ஏந்தி பங்கேற்பாளர்கள் முழக்கமிட்டனர்.
பாஸ் கட்சியினர், பி.கே.ஆர். முன்னாள் உறுப்பினர்கள் சிலரையும் அதில் காண முடிந்தது.
எனினும் எந்தவோர் அசம்பாவிதமும் அதில் நடைபெறவில்லை.
மறியல் முடிந்து அவர்கள் அமைதியாகக் கலைந்துச் சென்றனர்.
இதுவொரு தொடக்கமே என்றும் மாபெரும் பேரணி உண்மையில் ஜூலை 26-ஆம் தேதி மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறும் எற்றும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அதில் முன்னாள் பிரதமர்களான துன் Dr மகாதீர் மொஹமட், தான் ஸ்ரீ முஹிடின் யாசின், பாஸ் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.