Latestமலேசியா

LRT இரயிலில் சிறுநீர் கழித்த குழந்தை; பொருட்படுத்தாமல் இருந்த தாய் – வலைத்தளவாசிகள் கண்டனம்

கோலாலம்பூர், ஜூலை 7 – LRT இரயிலில் தாய் கைப்பேசியில் மூழ்கியிருந்த நிலையில், அவரின் குழந்தை இரயிலிலேயே சிறுநீர் கழித்த சம்பவம் சக பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. இது குறித்த டிக் டாக் காணொளியும் வைரலாகியிருக்கிறது.

தனது மூன்று குழந்தைகளுடன் இரயிலில் பயணம் செய்த அவர், குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடுவதையும் கண்டுக்கொள்ளவில்லையென ஒரு கருத்தும் அக்காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, குழந்தை சிறுநீர் கழித்தும், அதை பொருட்படுத்தாமல் அப்படியே இருந்தது வலைத்தளவாசிகளின் கண்டனத்தை பெற்று வருகிறது.

இச்சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் எங்கு நிகழ்ந்ததென்ற விவரம் தெரிவிக்குமாறு RapidKL நிறுவனம் காணொளியை பதிவேற்றியவரை கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!