
ரோம், ஜூலை-9 – வட இத்தாலியின் பெர்காமோ விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இயந்திரத்தால் ‘உறிஞ்சப்பட்டு’, ஓர் ஆடவர் கோரமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 வயது அந்நபர் திடீரென விமான நிலையத்திற்குள் புகுந்து, அவசரப் பாதை வழியாக விமான ஓடுபாதையை நோக்கி ஓடினார்.
அதிகாரிகளும் துரத்திக் கொண்டு ஓட, அதற்குள் அங்கு புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இயந்திரத்தில் அந்நபர் சிக்கி உயிரிழந்தார்.
அவர் பயணியோ அல்லது விமான நிலையப் பணியாளரோ கிடையாது என, ஸ்பெயின் நாட்டின் Volotea விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.
அச்சம்பவத்தில் விமானத்தினுள் இருந்த அனைத்து 154 பயணிகளும் 6 பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்டது.
அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து உடனடியாக மூடப்பட்ட விமான நிலையம் நேற்று மதியம் வாக்கில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.