
கூச்சிங், ஜூலை-11 – சரவாக்கைச் சேர்ந்த 2 நண்பர்கள் தற்செயலாக எடுத்த முடிவு, ஒரே இரவில் அவர்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.
மெக்னம் குலுக்கலில் பரிசுப் பணம் 15 மில்லியனைத் தொட்டு விட்டதைப் பார்த்த இருவரும், தங்களது அதிர்ஷ்டத்தை சோதிக்க எண்ணி கூட்டாக system-10-னில் பந்தயம் கட்டியுள்ளனர்.
System-10 விளையாடுவதற்கு மொத்தம் 10 4D எண்கள் தேவைப்படும் என்பதால் இருவரும் தலா 5 4D எண்களைக் கணித்துள்ளனர்.
அவ்வெண்கள் அவர்களின் பிறந்த தினங்களோ வாகனப் பதிவு பட்டை எண்களோ அல்ல; மாறாக அன்றைய தினத்தின் எண்கள் மட்டுமே.
தங்களின் உள்ளுணர்வின் பேரில் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி பந்தயம் கட்டினர்.
அந்நம்பிக்கை வீண்போகவில்லை.
அவர்கள் பந்தயம் கட்டிய 1138 மற்றும் 5017 ஆகிய எண்கள் சிறப்புப் பரிசில் இடம்பிடித்தன.
பிறகு அவ்விரு 4D எண்களும் மூன்றாவது மற்றும் முதல் பரிசை வென்றதால் இருவரும் மகிழ்ச்சியில் துள்ளினர்.
அது கனவா நனவா என நம்ப முடியாமல் இரவு முழுவதும் இருவரும் தூங்கவே இல்லை.
பரிசுப் பணத்தைக் கொண்டு நீண்ட நாள் ஆசையான வெளிநாட்டு சுற்றுப்பயணமும் சொந்த வீடும் வாங்கப் போவதாக நண்பர்களில் இருவர் கூறினார்.
இந்நிகழ்வு அதிர்ஷ்டத்தையும் தாண்டி ஒரு நல்லநட்பு அதனுள் அமைந்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக மெக்னம் நிறுவனம் வருணித்தது.