
ஜார்ஜ் டவுன், ஜூலை 11 – தவறான போலீஸ் புகார் அளித்ததற்காகவும், பெர்மிட்டின் அனுமதிக் காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்ததற்காகவும் தென் கொரிய நபருக்கு இன்று 2,000 ரிங்கிட் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
55 வயதான அந்நபர் வேண்டுமென்றே காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்த நிலையில் கடப்பிதழ் காலாவதியான பிறகும் நியாயமான காரணங்களின்றி மலேசியாவில் நீண்ட நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், முதல் குற்றச்சாட்டிற்கு 2,000 ரிங்கிட் அபராதமும் இரண்டாவது குற்றச்சாட்டிற்காக மூன்று மாத சிறைத்தண்டனையும் விதித்தது.
மேலும், குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை மீறியதற்காக அந்த ஆடவருக்கு 10,000 ரின்கிட்டிற்க்குக் குறையாத அபராதமும் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.