Latestமலேசியா

பாதுகாவலர் கழுத்தில் பாராங் வைத்து மிரட்டல் – ஆடவன் கைது

ரவுப் , ஜூலை 11 – ரவுப் , Hutan Simpan Tras வனப்பகுதியில் பணியில் இருந்த ஒரு பாதுகாவலரின் கழுத்தில் பாராங் கத்தி வைத்து குற்றவியல் மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவன் கைது செய்யப்பட்டதாக ரவுப் மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான்
( Mohd sharil Abdul Rahman ) தெரிவித்தார்.

இரவு மணி 11.15 அளவில் Kampung Baru Sungai Lui யில் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஹோண்டா EX-5 மோட்டார் சைக்கிள் மற்றும் போலி பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனமான Toyota Land Cruiser ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tras வனப் பகுதியில் தாம் பணியில் இருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த ஐவர் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட 29 வயதுடைய அந்த காவலர் புதன்கிழமை பிற்பகல் மணி 1.20 அளவில் போலீசில் புகார் செய்திருந்தார்.

பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த கோளை திறக்கும்படி அவர்களில் ஒருவன் கோட்டதாகவும் அதற்கான சாவு இல்லை கூறியவுடன் அவர்களில் ஒருவன் தனது கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியதாக அந்த புகாரில் அவர் கூறியிருந்தாக Superintenden முகமட் ஷாரில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!