
கோலாலம்பூர், ஜூலை-16- KLIA 1 அமுலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளிநாட்டவர்களை இங்கே கொண்டு வரும் கும்பலின் தலைவன் உள்ளிட்ட இருவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் வலையில் சிக்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கோலாலம்பூரைத் தளமாகக் கொண்ட சுற்றுலா முகவர் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார்.
ஒரு வெளிநாட்டுத் தொழிலாளருக்கு 1,800 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரை counter setting முறையில் அதிகாரிகளுக்கு அவர்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர்.
சந்தேக நபர்களின் இருப்பிடங்களில் வாகனங்களுக்குள் வைத்து ரொக்கமாக இடைத்தரகர்களிடம் லஞ்சப் பணம் கைமாறியுள்ளது.
இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 138,000 ரிங்கிட் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
50 வயதிலான 2 சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவும் வகையில் ஜூலை 20 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.