Latestமலேசியா

RM312,000 மாதச் சம்பளத்தில் Shangri-La Asia ஹோட்டலின் CEO ஆகிறார் கோடீஸ்வரர் ரோபர்ட் கோக்கின் மகள்

கோலாலாம்பூர், ஜூலை-16- மலேசியக் கோடீஸ்வர் தான் ஸ்ரீ ரோபர்ட் கோக்கின் (Robert Kuok) மகள் Kuok Hui Kwong, ஆசியாவின் முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான Shangri-La Asia-வின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்கிறார்.

ஆகஸ்ட் 1 முதல் அது நடப்புக்கு வருகிறது. CEO என்ற வகையில் 47 வயது Hui Kwong, மாதச் சம்பளமாக 312,000 ரிங்கிட்டைப் பெறுவார்.

போனஸ் மற்றும் பென்ஷன் சலுகைகள் இதில் சேர்க்கப்படவில்லை.

2016 ஜூனில் அந்த ஹோட்டலின் தலைமை நிர்வாகியாகவும், பிறகு அதன் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்குண்டு.

Shangri-La Asia-வில் நேரடி மற்றும் நேரடி அல்லாத 95.57 மில்லியன் பங்குகளை அவர் வைத்துள்ளார்; அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளில் அது 2.7 விழுக்காடாகும்.

1971-ஆம் ஆண்டு ரோபர்ட் கோக் Shangri-La குழுமத்தை நிறுவியதும், சிங்கப்பூரில் இந்த Shangri-La-Hotel திறக்கப்பட்டது.

கடந்தாண்டு வரைக்குமான தகவலின்படி, 100 ஹோட்டல்களை இந்த Shangri-La Asia நிர்வகிக்கிறது; அவற்றில் 81 ஹோட்டல்கள் அதற்குச் சொந்தமானவை.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!