
கோலாலம்பூர், ஜூலை 16 – நாளை முதல் அடுத்த 90 நாட்களுக்கு சீனாவிற்கு குறுகிய காலம் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மலேசியர்கள் விசா இல்லாமல் தங்களின் பயணத்தை தொடரலாம்.
சீனா மலேசியா ஒப்பந்தத்தின் கீழ், மலேசிய மற்றும் சீன கடப்பிதழ்களை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்கள் நாடுகளுக்குள் நுழையலாம், வெளியேறலாம் என்றும், ஒரு முறை வருகை புரிந்தால் 30 நாட்கள் வரை தங்கலாம் என்றும் மலேசியாவிலுள்ள சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுற்றுலா, குடும்ப வருகைகள், வணிகம், கலாச்சார பரிமாற்றம், தனியார் விவகாரங்கள், மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற நோக்கங்களுக்காக விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்கு மேல் தங்க திட்டமிட்டுள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் பொருத்தமான விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சீன அதிபர் கோலாலம்பூருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வருகையின் போது சீனாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே விசா விலக்கை நீட்டிக்கும் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.