
காஜாங், ஜூலை-16- காஜாங், செமிஞ்சேவில் உள்ள Bukit Broga மலையில் ஏறும் போது இன்று காலை வழித் தவறி காணாமல் போன 7 மலையேறிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காலை 9 மணிக்கு தகவல் கிடைத்து சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை சம்பவ இடம் விரைந்தது.
20 வயதிலான 5 பெண்களும் 2 ஆண்களும் காலை 10.50 மணியளவில் முதலாவது உச்சியில் காணப்பட்டனர்.
எழுவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.அவர்களைப் பாதுகாப்பாக கீழே கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதாக தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.