Latestமலேசியா

பி.கே.ஆர் எங்களை இடை நீக்கம் செய்தால் என்ன; எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும் – ரபிசி

கோலாலம்பூர், ஜூலை 17- நீதித்துறை நியமனங்கள் மற்றும் நீதித்துறையில் தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்க வலியுறுத்தியதற்காக, தன்னையும் மற்ற எட்டு எம்.பி.க்களையும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு பி.கே.ஆர் துணைத் தலைவரான Rafizi Ramli பதிலடி கொடுத்துள்ளார்.

இடைநீக்கங்கள் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க எதுவும் செய்யாது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்காது என்றும் ரபிசி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை பி.கே.ஆர் இனி எதிர்ப்பை பொறுத்துக்கொள்ளாது என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

குறிப்பாக Hassan Karim போன்ற பிற MPக்கள் கடந்த காலத்தில் பிரதமரை இன்னும் கடுமையாக விமர்சித்திருந்தாலும், எந்த விளைவுகளையும் சந்திக்கவில்லை என்று ரபிசி x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இடைநீக்கங்கள் நாடாளுமன்றத்தில் PKR MPகளின் எண்ணிக்கையை 22ஆகக் குறைக்கும் என்பதோடு , DAP , தேசிய முன்னணி, GPS எனப்படும் Gabungan Parti Sarawak ஆகியவற்றைக் காட்டிலும் இது குறைவாக இருக்கும் என ரபிசி கூறினார்.

தற்போது நாடாளுமன்றத்தில் PKR 31 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

Pandan MP ரபிசி ரம்லி, Setiawangsa MP Nik Nazmi Nik Ahmad , அம்பாங் MP Rodziah Ismail, சுபாங் MP Wong Chen, வங்சா மாஜூ MP Zahir Hassan , Balik Pulau MP Muhammad Bakhtiar Wan Chik , Ledang MP Syed Ibrahim Syed Noh , சுங்கை சிப்புட் MP S Kesavan, பத்து பஹாட் MP Onn Abu Bakar  ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டுமென PKR division தலைவர்கள் விரும்புகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!