Latestமலேசியா

புதிதாக 4 இடங்களில் இன்று காலை 8மணிவரை காற்றின் தூய்மைக்கேடு ஆரோக்கியமாக இல்லை

கோலாலம்பூர், ஜூ 21 – இன்று காலை 8 மணி நிலவரப்படி, பகாங் , கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், திரெங்கானு மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் நான்கு புதிய இடங்கள் ஆரோக்கியமற்ற காற்று தூய்மைக்கேடு குறியீட்டை பதிவு செய்துள்ளன.

ஆரோக்கியமற்ற காற்று தூய்மைப் கேடு குறியீட்டை பதிவு செய்த ஒன்பது இடங்களில் தெமர்லோ, செராஸ், கெமமான் புக்கிட் ரம்பாய் ஆகியவையும் அடங்கும் என காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு இணையத்தளம் மற்றும் சுற்றுச் சூழல் தெரிவித்துள்ளது.

மலாக்காவில் அலோர் கஜா பகுதியில் காற்றின் தூய்மைக் கேடு 159 ஆகவும், நெகிரி செம்பிலான் நீலாயில் 158 ஆகவும் , சிலாங்கூர் பந்திங்கில் 155 ஆகவும் , ஜோஹான் செத்தியாவில் 152 ஆகவும் , புத்ரா ஜெயாவில் 123 ஆகவும் காற்றின் தூய்மைக் கேட்டின் அளவு பதிவாகியுள்ளன.

மூன்று பகுதிகளில் காற்றின் தரம் நன்றாக இருந்தாலும் 56 பகுதிகளில் காற்றின் தரம் மிதமாக பதிவாகியுள்ளது. முன்னதாக, தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரையில் உள்ள பல மாநிலங்களில் எல்லை தாண்டிய புகைமூட்டம் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

ஆசியான் சிறப்பு வானிலை மையம், சுமத்ரா பகுதியில் 79 வெப்பப் பகுதிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக MET Malaysia எனப்படும் மலேசிய வானிலைததுறையின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிசாம் முகமட் அனிப் ( Mohd Hisham Mohd Anip தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!