Latestஉலகம்

இத்தாலி கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் காரின் விபத்தில் சிக்கியது

ரோம், ஜூலை 21 -இத்தாலியில் GT 4 ஐரோப்பிய தொடர் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்டபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. அவர் காயம் அடையவில்லை என்ற போதிலும் பந்தய தடத்தில் காரின் உடைந்த பாகங்களை அகற்றும் பணியாளர்களுக்கு நடிகர் அஜித் உதவுவதை காண முடிந்தது.

GT4 ஐரோப்பிய தொடரின் இரண்டாவது சுற்றில் பங்கேற்றபோது மிசானோ கார் பந்தய தடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அஜித்தின் கார் பந்தய திடலில் இருந்த ஸ்டேசனரி காரில் மோதியபோதிலும், அஜித் காயமின்றி வெளியே வந்ததால் அவர் பந்தயத்திலிருந்து விலக வேண்டியிருந்தது.

அவரது விரைவான முடிவும் , அனுபவமும் ஒரு பெரிய விபத்தைத் தவிர்ப்பதில் முக்கிய பங்கை ஆற்றியதாக கூறப்படுகிறது.அஜித் தற்போது பெல்ஜியத்தில் Spa – Fracorchamps சுற்றுப் போட்டியில் மூன்றாவது சுற்றுக்குத் தயாராகி வருகிறார்.

தனது பணிவை வெளிப்படுத்தும் விதமாக, விபத்து நடந்த இடத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அஜித் உதவியது அவரது பணிவான இயல்பை வெளிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!